Friday, December 21, 2012

தொலைந்துவிட்டேன் ..


நான் 
கனவுக்குள் தொலைந்துவிட்டேன்...
ஆம் 
உன்னுடன் பேச நினைக்கும் 
தொலைபேசி உரையாடலை 
மனதிற்குள் நித்தம் 
பயிற்சி செய்துகொள்கிறேன்...

பருவ மழை சாரலில் 
ஒரு கொடையுனுள் 
இருவரும் நடந்திடும் தருணத்தை 
நினைத்து ரசித்து 
மகிழ்ந்து கொண்டிருக்கிறேன் ..

மழைத் தூரலில் 
முழுதாய் நனைந்திடாமல் 
நடுக்கத்துடன் அருந்திடும் 
சாலையோர தேநீரை 
உன் அருகில் அமர்ந்து 
ருசித்து கொண்டிருக்கிறேன்...

விடைகொடுக்க மனமில்லாமல்
கைகளை கோர்த்து கொண்டும்
தோல் மீது சாய்ந்து கொண்டும்
பரிமாறும் காதல் வரிகளை 
என் நெஞ்சில் 
பதிய வைத்துகொண்டிருகிறேன்...

உன் 
நினைவுகளோடு கனவில் 
வாழ தொடங்கிவிட்டேன்...
உண்மையில் நீயோ கனவாய்...

Monday, December 10, 2012

சொல்லாமலே இருந்திருப்பேன் ...

முடியாது 
என்ற சொல்லுக்கு 
முப்பது வரி விளக்கமா?

தெரிந்திருந்தால் 
சொல்லாமலே இருந்திருப்பேன்
என் கனவுகளை ...
பாவம் 
விரல் நோக 
விடையனுப்பியிருக்க மாட்டாள் 
என்னவள்...

Monday, December 3, 2012

துடிக்கின்றேன்...

எத்தனை பெண்களை பார்த்திருந்தாலும் 
உன் 
கண்களை காணும் 
நொடியில் தான் 
என் இதயத்தின் இடப்பக்கம் 
கனமாகிறது...
இப்படிப்பட்ட  உணர்வு  
உனக்குள்ளும் இருக்குமோ 
என்னும் 
எண்ணமும் ஆசையும் 
என்னுள் எண்ணற்ற 
கனவுகளை ஏற்படுத்துகிறது ...
என் தவிப்புகளை புரிந்திருந்தும்
காதலிக்க 
நீயோ தயங்குகிறாய் 
நானோ  துடிக்கின்றேன்...

Monday, November 26, 2012

முயற்சி ...



முழுமையாய் 
முயற்சி செய்ய வழிகள் 
இருந்தும் 
முடியாது என 
மனம் துவழும்போது 
நான் 
நினைத்து கொள்வது 
குறை இருந்தும் 
கவலை படாமல் 
முயன்றே 
வென்றிடும் மாற்று திறனாளிகளை ...

Wednesday, November 7, 2012

அழகு...!!!


உலகில் 
பல ஒளி விளக்கு 
இருந்தாலும் 
அந்த ஆதவனுக்கு ஈடில்லை...
அது போல தான் 
என்னவளின் 
அழகும்...

Monday, November 5, 2012

சொர்க்கம்...!

அவளிடம் 
பேசும் போதே 
இறந்துவிட்டால் நிச்சயம் 
சொர்க்கம் தான்...
ஆம்
தேவதையுடன் பழகிய 
நாட்களின் விமோச்சனம்...

Friday, November 2, 2012

ஏமாற்றங்கள்....

பருவ மழை தான் 
ஞாபகம் வருகிறது 
ஆவலுடன் என்னவளின் 
பெயர் பதிவை 
அலைபேசி திரையில் 
தேடும்போது....
ஏனென்றால் 
எதிர்பார்க்கும் போதெல்லாம் 
ஏமாற்றங்களையே மனதில் 
பொழிந்து விட்டு சென்று 
கொண்டிருப்பதால்... 

Wednesday, October 31, 2012

உண்மையான பொய்...


அவள் 
மறுக்கிறாள்..
பிறர் அறியாமல் என்னை 
ரசித்ததை அவள் 
கண் கண்ணாடி சொல்லாது 
என்ற தைரியத்தில்...

அதுவல்லவா பாக்கியம்...


அடடா
அதுவல்லவா பாக்கியம்...
அவள் விரலுக்கும் 
அழகு இதழுக்கும் 
இடையில் அனுதினம் விளையாடி 
விமோச்சனம் பெரும் 
உணவுக் கரண்டியாய்
பிறந்திருந்தால்... 

Tuesday, October 30, 2012

காதோர ஒற்றை முடி...

நீ 
எத்தனை முறை ஒதுக்கினாலும் 
என் மனதினை போல் 
உன் அழகு முகத்தினை 
காண துள்ளி வருகிறது 
உன் காதோர ஒற்றை முடி...

Monday, October 29, 2012

எதிர்வினைகள்....

புறக்கணிக்கப் படுகிறது 
எனத் தெரிந்தும் 
அவள் பின்னால்
பயணிக்க முனைகிறது 
என் மனம்....
பதிலெதுவும் கிடைக்காது
எனப் புரிந்ததும் 
அவளுக்கு குறுந்தகவல் 
அனுப்புகிறது என் கரம்...
மறந்திட முடியாது 
என அறிந்தும் 
அவள் நினைவினை 
அழித்திட முயல்கிறது 
என் உள்ளம்...
என் சுரப்பிகளின் 
எதிர்வினைகளை 
நிறுத்தவும் முடியாமல் 
நகர்த்தவும் முடியாமல் 
திண்டாடுகிறது உள்ளம்...

Friday, October 26, 2012

என்று கிடைக்கும் விமோச்சனம்....!!!!

அவளை மறக்க எண்ணி 
நித்தம் நினைத்து 
கொள்கிறேன்....
கனவிலும் 
அவள் முகம் 
கருவிழிகளிலும் 
அவள் முகம்...
நின்றாலும் தொடுகிறது 
நடந்தாலும் தொடர்கிறது 
அவள் நினைவுகள் என் 
நிழல் போல....
எனக்கு 
மறக்கவும் மனமில்லை...
மணக்கவும் அவளில்லை...
என்று கிடைக்கும் விமோச்சனம்
என் கண்களின் கண்ணீருக்கும் 
கைகளின் தண்ணீருக்கும்....

Tuesday, October 16, 2012

உடைத்துவிடத்தோணுதே...

உடைத்துவிடத்தோணுதே...
என்னவளின் 
அலைபேசி எண்ணை
வாங்கிடும் நொடியில் 
சிணுங்கி 
சிக்கலை ஏற்படுத்திய 
எனது அலைபேசியை...

பரிசு...


காற்றோடு ஆடிடும் 
காதோர முடியினை 
நுனி விரலால் ஒதுக்கிடும் 
அழகிற்கே நான் கொடுப்பேன் 
அவள் காதோடு சிணுங்கிடும்
கண் கவரும் தோடு....

Monday, October 8, 2012

காத்துகொண்டிருகிறேன்...

காத்துகொண்டிருகிறேன்...
முடிவில்லா பயணத்தை 
என்னவள் விரல்பிடித்து 
வலி இல்லாமல் 
கடப்பதற்கு...

எதிர்பார்த்துகொண்டிருகிறேன்...
அளவில்லா தவிப்புகளை 
அவளுடன் பகிர்ந்திடும் 
குறைந்திடா நொடியிற்கு...

ஏங்கிகொண்டிருகிறேன்...
அழியாத நினைவுகளை 
என் நெஞ்சத்தில் 
செதுக்கிடும் என்னவளின் 
அன்பிற்கு...

உருகிகொண்டிருகிறேன்....
மேகத்தில் ஒளிந்திருக்கும் 
நிலவினை போல் 
என்னக்குள் மறைந்திருக்கும் 
அழகு முகத்தினை 
காண்பதற்கு....

ஆசைகொண்டிருகிறேன்....
எண்ணற்ற மாற்றங்களை 
என்னுள்  அளவற்ற அன்பினால் 
புகுத்திடும் என்னவளின் 
குணத்திற்கு....

Thursday, September 27, 2012

தேடிக்கொண்டிருக்கிறேன்...


தேடிக்கொண்டிருக்கிறேன்...
என் மனதோடு 
மையம் கொண்டு 
உயிரோடு ஒன்றாகும்
உறவினை...
என் மனதில் 
மறைந்திருக்கும் எண்ணற்ற 
கவிதைகளை மனம்விட்டு 
ரசித்திடும் மொழியினை...
என் உறக்கத்தில் 
நித்தம் கற்பனையாகவே 
காட்சியளித்திடும் என் 
கனவு தேவதையை...
என் சுவாசமாய்
என் உயிராய்
என் உறவாய் கலந்திட 
எனக்காகவே 
பிறந்திருக்கும் என்னவளை....

என் இதய துடிப்பு...


உயிர் காற்றை சுவாசித்து 
மனித இனம் வாழுதடி...
உன் நினைவை சேகரித்தே 
என் இதயம் துடிக்குதடி...

Wednesday, September 26, 2012

சிட்டாய்...


சிறகடிக்கும் சிட்டாய் 
என் சிந்தையில் 
நுழைந்த உன்னை 
பிரித்தெடுக்க மனமில்லாமல் 
அலைகிறேன் பித்தாக...
உன் நினைவால் என்றும் 
முத்தாக...

Monday, September 24, 2012

குறுந்தகவல்...


என்னவள் செல்லமாக 
கோபம் கொண்டால்...
அவளனுப்பிய 
குறுந்தகவலை சேகரிக்கவில்லை என்று..
நான் புன்னகைத்தேன்...
அவள் கனவிலும் 
நினைத்திருக்க மாட்டாள்
அவை அனைத்தும் என் 
நெஞ்சில் செதுக்கபட்டு விட்டன என்று...

நட்சத்திரங்கள்....


அவள் பார்த்த பின்பு 
பூத்த மலர்கள் இன்னும் 
பிரகாசித்து கொண்டிருகின்றன...
வானில் நட்சத்திரங்களாக....

என்னவள் !!!!!!

சூரியனும் சுருங்கி விடும் 
அவள் அழகில்...
குயிலின் ஓசை  குலைந்துவிடும் 
அவள் மொழியில்...
தண்ணீரால் மலரவில்லை பூக்கள் 
என்னவளின் புன்னகையால்...
கருமேகம் கரைந்து போகும் 
அவள் அழுகையில்...
வசந்தகாலம் வந்து போகும்  
அவள் சிரிக்கையில்...
காற்று மட்டுமா அலைகிறது 
அவள் இதயத்தை தேடி,
என் காதலும் தான்.....

Friday, September 14, 2012

என் சுவாசங்கள்..

என் வெள்ளை உள்ளத்தில்
நான் விரும்பிய வண்ணங்களை
தெளிப்பதும்....

என் நினைவுகளில்
பயணிக்கும் போது எனது
புகைப்படங்களை அலங்கரிப்பதும்...

நான் துவண்ட போதெல்லாம்
துணையாய் துயரம்
துடைப்பதும்...

என் துன்ப நொடிகளையும்
இன்ப வருடங்களாக்கும்

நண்பர்கள்
சொந்தம் மட்டுமல்ல...
எனது சுவாசமும் தான்...

உணரமுடியவில்லை...

என்னால் எழுதமுடியவில்லை...
என் எண்ணங்களை
ஒருங்கிணைத்து ஒரு வரி
கவிதை...!!!
அது போல்
இன்று வரை
உணரமுடியவில்லை - என்னவளை
நினைக்கும் நொடியில்
தோன்றிடும் ஆயிரம் கவிதைகளின்
காரணத்தை....

Monday, September 3, 2012

ரசிக்கிறேனடி...

அன்பே,
இறைவன் உன்னை படைத்திருந்தால் 
நான் ரசித்திருக்கவும் மாட்டேன்....
அவன் 
உன்னை வடித்தல்லவா இருக்கிறான் 
நான் காதலிப்பதற்கு....
எப்படி 
என்னால் முடியும் 
கண்  இருந்தும் குருடனாக
நடிப்பதற்கு....

காதலின் வேதம்

நீரின்றி அமையாது உலகு....
இது வள்ளுவனின் வாக்கு அன்று...!!!!!
அதுபோல்,
நீயின்றி நிறைவுறாது என் கனவு...
இது இக்காதலனின் வேதம் இன்று...